undefined Movie undefined Photos, Videos, Reviews
undefined Movie undefined Photos, Videos, Reviews

Padman

Review Byte

Padman

தன் மனைவியின் மாதவிடாய் கால கஷ்டங்களை எல்லா பெண்களின் கஷ்டமாக நினைத்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்ட எல்லாவற்றையும் இழந்து தவித்த ஒரு மனிதனின் கதைதான் Padman. அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கப்பூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த படம், கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் உண்மை கதை. குறைந்த விலையில் மாதவிடாய்க்கு பயன்படுத்தும் Sanitary Napkin தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடுத்து, அதை இந்தியாவின் எல்லா திசைகளுக்கும் கொண்டு சேர்க்க என்ன தடைகளை சந்திக்கிறார் அக்ஷய் குமார் அதனால் ஏற்படும் துயரங்கள் என்ன என்பது தான் கதையின் கரு. பிரபல இயக்குனர் பால்கியின் மிக சிறப்பான திரைக்கதை திரைப்படத்திற்கு பலம் சேர்கிறது. பெண்களின் மாதவிடாய் பற்றி பொதுவெளியில் பேசுவதற்கே தயங்கும் சமூகத்தில், கருத்தின் தன்மை மாறாமலும் சுவாரசியமாகவும் கதையை நகர்த்தி இருப்பதே இப்படத்தின் சிறப்பு. பெண்கள் படும் அவதியை தானும் அனுபவித்தால் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று அக்ஷய் குமார் எடுக்கும் முயற்சிகள் சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது. சோனம் கப்பூர் second half'ல் வந்தாலும் அவரது கதாபாத்திரம் தான் கதையை சுமக்கிறது. அமித் திரிவேதியின் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை தருகிறது. சூப்பர் ஹீரோக்கள் Spider-man, Super-man மாதிரி நம் நாட்டின் ரியல் ஹீரோ Padman என ரசிகர்கள் அக்ஷய் குமாரை கொண்டாடி வருகிறார்கள. வெளிநாட்டிற்கு சென்று தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பதினைந்து நிமிடம் அக்ஷய் குமார் தன வாழ்க்கை கதையை சொல்வது ரசிகர்கள் அனைவரையும் கவர்கிறது. வெறும் பதினெட்டு விழுக்காடு பெண்கள் மட்டுமே sanitary napkin பயன்படுத்தும் நம் நாட்டில், அதை நூறு விழுக்காடு பெண்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென ஹீரோ லட்சுமி எடுக்கும் முயற்சி படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் பலன் தரும் வகையில் படம் அமைந்து இருக்கிறது.

Share:
Browes Padman's
personProfile Page
photo_libraryPhoto Gallery
video_libraryVideo Page

Related stories