undefined Movie undefined Photos, Videos, Reviews
undefined Movie undefined Photos, Videos, Reviews

Aama Naan Porukkithan

chevron_right
ஜெய் ஆகாஷின் ‘ஆமா, நான் பொறுக்கிதான்’

Aama Naan Porukkithan

ஜி பிலிம் பேக்ட்ரி சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ள ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. பூஜையில் ஹீரோ ஜெய்ஆகாஷ், ஹீரோயின்கள் அனிஷா, தீப்தி, நடிகர்கள் பொன்னம்பலம், பவர்ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், தயாரிப்பாளர்கள் ஷாஜகான், ஆனந்தன், இயக்குனர் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் கதாநாயகனாக ஜெய்ஆகாஷ், கதாநாயகிகளாக அனிஷா, தீப்தி மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன், பொன்னம்பலம், சாம்ஸ், சுமன்ஷெட்டி, கயல் வின்செண்ட், மும்பை வில்லன்: ஜித்தேந்திரசிங் ஆகியோர் நடிக்கின்றனர். கதை சுருக்கம் சர்வதேச அளவில் தவறான தொழில் செய்யும் வில்லனுக்கு ஒரு ஜோடியால் சிக்கல் ஏற்படுகிறது. அந்த ஜோடியை தீர்த்துக் கட்ட வில்லன் எடுக்கிற முயற்சியில் பெண் மட்டும் இறந்துபோகிறார். அவள் சாகும் நிலையில் தன்னை இந்த நிலைக்கு ஆளானவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும்படி கணவனிடம் வேண்டுகோள் வைக்கிறார். வெகுண்டெழுந்த கணவன் அந்த வில்லனை தேடி மாநிலம் மாநிலமாக, நாடு நாடாக சென்று கண்டுபிடிக்க போகிறான். வில்லனை கண்டுபிடித்தானா, அந்த கணவன் யார் என்பதை மிக அழுத்தமாக அதேநேரம் விறுவிறுப்பான கதையாக மாற்றியிருக்கிறார் தேவராஜ். சென்னை டூ பாங்காங் படத்தை தயாரித்தவர்கள்தான் இதையும் தயாரிக்கிறார்கள். அப்பாவி கணவனாக இருந்து அதிரடியாக வில்லனை பழிவாங்கும் கேரக்டரில் ஜெய் ஆகாஷ் தனக்கே உரிய பாணியில் நடிக்கயிருக்கிறார். கதை சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களிலும் லண்டன், மலேசியா, ஹாங்காங், ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது. யூ .கே முரளி இசையமைப்பில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகிறது .இதில் சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் இடம்பெறுகிறது . மெகா பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்திற்கு ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு குறித்து கதாநாயகன் ஜெய் ஆகாஷிடம் கேட்டபோது, ‘நெகட்டிவ் வைபரேஷன் எப்போதுமே சினிமாவில் பாசிட்டிவ் ரிசல்ட் தந்திருக்கிறது. உதாரணத்திற்கு பிச்சைக்காரன், நானும் ரவுடிதான் இப்படி பல படங்களை சொல்லலாம். இதுவும் மிக பரபரப்பான கதையாக இருக்கும். முதல்முறையாக பெரும் பொருட்செலவில் பல நாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இன்று தொடங்கிய படப்பிடிப்பு 60 நாட்களில் முடியும். 3 கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெறும். விறுவிறுப்பான கதையில் காமெடியும் இருக்கிறது. முதல்முறையாக 5 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறேன். அதில் ஒன்று பார்வையற்ற கேரக்டர். என்னைப்போலவே நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும் பொய்யாக பார்வையற்றவராக வேஷம்போட்டு ஹீரோயினை கரெக்ட் செய்ய வருவார். அந்த காட்சிகள் மிகவும் கலகலப்பாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கமே தமிழ் சினிமாவுக்கு மிக அருமையாக இருக்கிறது. இந்த ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ படம் என் கேரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும். இத்திரைப்படம் மே மாதம் வெளியாகிறது.

Share:
Browes Aama Naan Porukkithan's
personProfile Page
photo_libraryPhoto Gallery
video_libraryVideo Page

Related stories