விரைவில் வெளியாக இருக்கும் 'தப்பு தண்டா' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் இசையமைப்பாளர் நரேன் பாலகுமாருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. 'தப்பு தண்டா' திரைப்படத்திற்காக இவர் இசை அமைத்த 'டூப்ளிக்கா டோமாரி' பாடல் யூ டூபில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையமைத்த 'சென்னை சூப்பர் கிங்ஸ் கீதம்', சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு சமர்ப்பணம் செய்யும் விதத்தில் இவர் இசையமைத்த 'தலைவனுக்கு ஒரு பாட்டு' ஆகிய பாடல்களை தவிர்த்து, இவர் பின்னணி இசையமைத்த 'ரே', 'மோரிபந்', 'ஊமை' போன்ற குறும்படங்களும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சிகரம் பாலுமகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த 'தப்பு தண்டா' படத்தை, 'கிளாப்போர்டு புரொடக்ஷன்' சார்பில் தயாரித்து இருக்கிறார் சத்யமூர்த்தி. "டூப்ளிகா டோமாரி பாடல் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருப்பதற்கு முழு காரணம் ரசிகர்கள் தான். முதலில் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எங்களின் 'தப்பு தண்டா' படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் இருக்கின்றது. இவை அனைத்திற்கும் வயோலின், கிட்டார், புல்லாங்குழல் என பெரும்பாலும் லைவ் இசை கருவிகளையே பயன்படுத்தி இருக்கின்றோம். அதுமட்டுமின்றி, பாடகர்கள் சின்மயி, அபே, அல்போனேஸ் ஜோசப், ஹரிஹர சுதன், ஹைடி கார்ட்டி மற்றும் கானா வினோத் ஆகியோரின் குரல், 'தப்பு தண்டா' பாடல்களுக்கு உயிர் கொடுத்து இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன். மும்பை நகரில் உள்ள 'நியூ எட்ஜ் ஸ்டுடியோவில்', பிரபல சவுண்ட் என்ஜினீயர் ஷதாப் ரவீன் தலைமையில் இந்த பாடல்கள் அனைத்தும் ரெகார்ட் செய்ய பட்டிருக்கிறது. தற்போது ஆடியோ என்ஜினீயர் தபாஸ் நாயக்கின் மேற்பார்வையில், பின்னணி இசையை டிஜிட்டல் முறையில் மெருகேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. மிக விரைவில் வெளியாகும் எங்களின் 'தப்பு தண்டா' படத்தின் பாடல்கள், ரசிகர்களின் உள்ளங்களை சரியான விதத்தில் கவரும்." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார். Thappu Thanda’ puts Music Director Naren Balakumar in the right track ‘Everything goes right’ is a positive thinking and with the same thought, debutante Music Director Naren Balakumar has stepped into Tamil Film Industry by the upcoming dark - comical - crime - thriller film ‘Thappu Thanda’. Directed by Veteran Filmmaker Balumahendra’s assistant Srikantan, the film ‘Thappu Thanda’ is produced by Sathyamurthi under the banner ‘Clapboard Production’. The single track ‘Duplikka Domaari’ composed by Music Director Naren Balakumar, a specialist in Hindustani and Western Classical has crossed over 1.2 Million views on Youtube, which is considered to be a great welcome to a debutante Music Director. Apart from ‘Chennai Super Kingz Anthem’, ‘Thalaivanuku Oru Paatu’ (A tribute to Superstar Rajini on his birthday), his works in award winning short films like ‘Ray’, ‘Moribund’, ‘Oomai’ are also much appreciated, especially for the background scores. “First of all I would like to thank the Audience for the 1.2 M views for our Duplikka Domaari song. We have got five songs and one theme track in Thappu Thanda film, for which we have mostly used live instruments. I must say that our singers Chinmayi, Abhay, Alphonse Joseph, Harihara Sudhan, Hyde Karty and Gaana Vinoth has added new colors to the songs. The mastering process of all the six tracks in ‘Thappu Thanda’ took place at New Edge Studios – Mumbai, which has been monitored by renowned Sound Engineer Shadab Rayeen. Now, under the control of Audiographer Thappas Nayek, we are in the DTS process for our BGMs and very soon it will be a wrap for back ground scores. The audio will be released shortly and I am sure that the audience will connect themselves with Thappu thanda on the right note.” says and signs off Music Director Naren Balakumar.