தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என கொண்டாட படும் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் விஜய் நடித்த திருப்பாச்சின் ரீமேக் போல இருந்ததால் அது பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளனது. மேலும் அந்த படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். தற்போது அவர் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அடுத்து அவர் மணிரத்தினம் மற்றும் பா. ரஞ்சித்துடன் இணையவுள்ளார். இந்த இரு இயக்குனர்களில் யாருடைய படத்தில் முதலில் நடிக்க போகிறார் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரஜினியும் எந்த வித பதிலையும் கூறாமல் இருக்கிறார். மற்றும் ஜெயிலர் படத்தின் இயக்குனரான நெல்சன் முன்பு எடுத்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகே இதை பற்றி ஆலோசிக்க உள்ளார் என பேசப்படுகிறது.